தளபதி 63: நயன்தாரா அப்பாவாக நடிப்பவர் யார் தெரியுமா?

vijay nayan1தளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின் நடிகை நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்

தற்போது விஜய், நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இருவருக்குமான ஒரு டூயட் பாடலின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் நயன்தாராவுக்கு அப்பாவாக நடிகர் கு.ஞானசம்பந்தம் நடித்து வருகிறார். இந்த தகவலை கு.ஞானசம்பந்தம் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு கல்லூரி விழாவில் உறுதி செய்துள்ளார்.

அட்லி இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

Leave a Reply