தல அஜித் அறிவுரையால் ஒழுங்காக வரி கட்டுகிறேன்: சிவகார்த்திகேயன்

தமிழ் திரை உள்ள பெரிய நடிகர்கள் ஒழுங்காக வருமானம் கட்டாததால் சில சமயம் வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்

இந்த நிலையில் தமிழ் திரையுலகில் ஒழுங்காக சொந்த பணத்தில் வரி கட்டுபவர் அஜித் ஒருவரே என்று கூறப்படுகிறது

ஒருசில மாஸ் நடிகர்கள் தயாரிப்பாளரையே வரியையும் கட்டச் சொல்லி வரும் நிலையில் அஜித் மட்டுமே அவர் தனது பணத்தில் இருந்து வரி கட்டி வருவதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் தல அஜித் ஒழுங்காக சரியான நேரத்திற்கு வருகை கட்டிவிட வேண்டும் என்று தனக்கு அறிவுரை கூறியதாகவும் அந்த அறிவுரையின் அடிப்படையில், தான் தற்போது ஒழுங்காக வரி கட்டி வருவதாகவும் நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளிவந்துள்ளது

தல அஜித் தான் மட்டும் ஒழுங்காக வரி கட்டுவது மட்டுமின்றி பிறருக்கும் அந்த அறிவுரையை கூறி வருவது பாராட்டுக்குரியதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply