shadow

தலைமை செயலகத்திற்குள் நுழையும் பெண்களுக்கு புதிய கட்டுப்பாடு: இம்ரான்கான் அரசு அதிரடி

பஞ்சாப் மாகாண தலைநகர் லாகூரில் செயல்பட்டு வரும் தலைமை செயலகத்திற்குள் நுழையும் பெண்கள் தலையில் முக்காடு அல்லது துப்பட்டா அணிய வேண்டும்’ என்ற புதிய உத்தரவு ஒன்றை இம்ரான்கான் அரசு பிறப்பித்துள்ளது.

நவீன பாகிஸ்தானை உருவாக்குவேன். சர்வாதிகாரத்தை ஒழிப்பேன்’ என்று முற்போக்கு சிந்தனையில் இருந்த பாகிஸ்தானின் இம்ரான்கான் அரசு திடீரென பெண்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பஞ்சாப் மாகாண தலைநகர் லாகூரில் தலைமை செயலகம் உள்ளது. ’அங்கு நுழையும் பெண்கள் தலையில் முக்காடு அல்லது துப்பட்டா அணிய வேண்டும்’ என்ற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. துப்பட்டா இல்லாத பெண்களை தலைமை செயலகத்திற்குள் அனுமதிக்க வேண்டாம் என வாய்மொழி உத்தரவு வந்திருப்பதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதான் இம்ரான்கானின் நவீன பாகிஸ்தானா? சர்வாதிகாரம் ஒழிப்பா? என பாகிஸ்தான் பெண்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Leave a Reply