தமிழ் திரைப்படத்தில் கதாநாயகனாகும் கிரிக்கெட் வீர்ர்: அதிகாரபூர்வ அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங் கடந்த சில ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடி வருகிறார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் சிஎஸ்கே வீரரான பின்னர் தமிழில் அவ்வப்போது டுவீட் செய்து தமிழ் ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது அவர் தமிழ் படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்

ஜேபிஆர் மற்றும் ஸ்டாலின் என்ற இரட்டையர்கள் இயக்கத்தில் ஷாம் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா என்ற இரட்டையர்கள் தயாரிப்பில் உருவாகவிருக்கும் ’பிரண்ட்ஷிப்’ என்ற படத்தில்தான் ஹர்பஜன் சிங்ஹீரோவாக நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இதுகுறித்து ஹர்பஜன்சிங் தனது டுவிட்டரில், ‘நேற்று கீச்சு,சினிமா கதாபாத்திரம், இணைய தொடர். இன்று ’பிரண்ட்ஷிப்’ படத்தின் நாயகன். தமிழ் மக்களுக்கு நன்றி. திருக்குறள் டூ திரைப்பயணம். அசத்துவோம்’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply