shadow

சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு இன்று தொடங்க உள்ளது. பொறியியல் கல்லூரிகளில் B.E, B.Tech, B.Arch படிப்பில் சேர இன்று முதல் ஆன்லைன் கலந்தாய்வு நடைபெறுகிறது. தமிழகத்திலுள்ள 431 கல்லூரிகளில் இன்று முதல் ஆக.24-ம் தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும்.

முதல் நாளுக்கான இன்று 7.5 % ஒதுக்கீட்டில், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதில் 121 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். வழக்கமாக சிறப்புப் பிரிவில் 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கும் சேர்த்து கலந்தாய்வு நடத்தப்படும். ஆனால், இந்த முறை பொதுப் பிரிவு கலந்தாய்வின் போது தான் 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

இந்தச் சலுகையால் அரசுப் பள்ளி மாணவர்கள் 7.5 சதவீத ஒதுக்கீடு, பொதுப்பிரிவு என இரு கலந்தாய்விலும் பங்கேற்று, இடங்களை தேர்வு செய்ய கூடுதல் வாய்ப்பு கிடைக்கும். அதில் தங்களுக்குப் பிடித்த கல்லூரிகளில் சேர்ந்து கொள்ளலாம்.

மேலும் பொது மற்றும் தொழிற்பிரிவினருக்கு கலந்தாய்வு ஆக.25 முதல் அக்.23-ம் தேதி வரை 4 சுற்றுகளாக நடைபெற உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 110 TFC மையங்களில் நடைபெறும் கலந்தாய்வில் மாணவர்கள் கலந்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.