shadow

ஈரோடு:

தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி பதவியிடங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. ஜூலை 12ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

* ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பெரியபுலியூர் 3வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.

*ஈரோடு மாவட்டம் அத்தாணி, அம்மாபேட்டை பேரூராட்சிகளில் தலா ஒரு வார்டுகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

*திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பனங்காட்டேரி, காமனூர் தட்டு உள்ளிட்ட 9 வார்டுக்கு 6 மையங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது.

*9 வார்டுகளில் ஒன்றிய குழு வார்டு உறுப்பினர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

*காஞ்சிபுரம் மாநகராட்சியில் விடுபட்ட 36வது வார்டுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

*நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்தின் 4வது வார்டுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

*திருவள்ளூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 5 இடங்களில் வாக்குப்பதிவு  நடைபெற்று வருகிறது.

*கரூர் மாவட்டம் க.பரமத்தி, கிருஷ்ணராயபுரம் ஒன்றிய பகுதிகளில் உள்ள 2 ஊராட்சிகளில் வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது.