தமிழக நீதிமன்றங்களில் நீதிபதி வேலை வாய்ப்பு: ரூ.45 ஆயிரம் சம்பளம்

தமிழக நீதிமன்றங்களில் 176 சிவில் நீதிபதிகளுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த காலியிடங்களுக்கு நேரடி போட்டித் தோ்வின் மூலம் நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவிப்பு செய்துள்ளது. கடந்த 9ம் தேதியன்று வெளியிடப்பட்டது இந்த அறிவிப்பின்படி இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வழக்குரைஞர்கள் மற்றும் சட்ட பட்டதாரிகள் விண்ணப்பம் செய்வது எப்படி? என பார்ப்போம்

நிர்வாகம் : தமிழக நீதிமன்றங்கள்

மேலாண்மை : தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம்

மொத்த காலியிடங்கள் : 176

பணி : சிவில் நீதிபதி

கல்வித் தகுதி : சட்டப் பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று இந்திய பார்கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

வயது வரம்பு சலுகை பெற விரும்புவோர் வழக்குரைஞர் பணி அனுபவம் பெற்றிருத்தல் அவசியம்.

வயது வரம்பு : 01.07.2019 தேதியின்படி சட்ட பட்டதாரிகள் 27 வயதிற்கு உட்பட்டும், சட்டப்படிப்பை முடித்து பணியாற்றும் வழக்குரைஞர்கள் 35 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும். விதவைப் பெண்கள் 40 வயதிற்கு உட்பட்டு இருக்கலாம்.

ஊதியம் : மாதம் ரூ.27,700 முதல் ரூ.44,770 வரை

விண்ணப்பக் கட்டணம் : ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : www.tnpsc.gov.in என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 09.10.2019

இப்பணி குறித்து மேலும் விபரங்களை அறிய //www.tnpsc.gov.in/Notifications/2019_25_CIVIL_JUGDE.pdf என்ற இணையதளத்திற்கு செல்லவும்

Leave a Reply