shadow

தமிழகத்தில் சார்பதிவாளர் அலுவலகங்கள் மூடப்படுகிறதா? அமைச்சர் வீரமணி பதில்

தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலங்களில் சமீபத்தில் திடீர் சோதனை நடந்தது. இதில் ஒரே நாளில் கோடிக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்டதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் குறைந்த அளவில் பத்திரப்பதிவு நடைபெறும் சார்பதிவாளர் அலுவலகங்களை மூட தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் உலாவி வருகின்றன

ஆனால் இந்த செய்திகளை வணிகவரித்துறை அமைச்சர் வீரமணி மறுத்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் வீரமணி கூறியபோது, ‘குறைந்த அளவில் பத்திரப்பதிவு நடைபெறும் சார்பதிவாளர் அலுவலகங்களை மூடவிருப்பதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தியில் உண்மையில்லை. மாண்புமிகு அம்மாவின் அரசில் அப்படி எந்த ஒரு திட்டமும் இல்லை என்று தெரிவித்து கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply