தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகள் எவை எவை?

திமுக கூட்டணியில் 10 தொகுதிகளை பெற்ற காங்கிரஸ், புதுவை ஒரு தொகுதி என்பது உறுதியாகிவிட்டது. அதைத்தவிர தமிழகத்தின் 9 தொகுதிகள் எவை எவை என்பது குறித்த ஆலோசனை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது

இந்த நிலையில் தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகளின் பட்டியல் ஓரிரு நாளில் வெளியாகும் என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் புதுக்கோட்டையில் பேட்டி அளித்தார். மேலும் ஜி.கே.வாசனின் தமாகா காங்கிரஸ் கூட்டணிக்கு வர விரும்பினால் கட்சிதலைமை பரிசீலிக்கும்

– தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் புதுக்கோட்டையில் பேட்டி

காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியல் திமுக தலைமையிடம் அளிக்கப்பட்டுவிட்டதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply