தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் இல்லை: தேர்தல் ஆணையம் அதிரடி

அதிமுக கூட்டணியில் இணைந்து ஒரே ஒரு தொகுதியை பெற்ற தமாகவுக்கு தஞ்சை தொகுதி ஒதுக்கப்பட்டது. அக்கட்சியின் வேட்பாளர் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அந்த கட்சிக்கு சைக்கிள் சின்னம் இல்லை என்று தேர்தல் ஆணையம் கைவிரித்துள்ளது

தஞ்சை தொகுதியில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட தமாகாவுக்கு அனுமதி இல்லை என்றும், 2 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற தேர்தல் ஆணைய நிபந்தனையை பூர்த்தி செய்யவில்லை என கூறி தமாகவின் மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து சைக்கிள் சின்னம் தமாகவுக்கு கிடைக்கவில்லை

இதனையடுத்து அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் அல்லது சுயேட்சை சின்னத்தில் தமாக போட்டியிடும் என கருதப்படுகிறது

Leave a Reply