தமாகவுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கீடு: தேர்தல் ஆணையம்

மக்களவை தேர்தலில் தஞ்சையில் போட்டியிடும் ஜி.கே.வாசனின் தமாக வேட்பாளருக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தமாகவிற்கு தஞ்சை தொகுதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் அக்கட்சியின் வேட்பாளராக என்.ஆர்.நடராஜன் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் சற்றூமுன் அறிவித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் தமாகவுக்கு சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. ஜிகே மூப்பனார் பெற்று தந்தை சைக்கிள் சின்னம் அக்கட்சிக்கு கிடைத்துள்ளதால் அக்கட்சின் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Leave a Reply