shadow

தனுஷின் வடசென்னைக்கு வாழ்த்து கூறிய முதல் பிரபலம்

தமிழ் திரையுலகில் தனுஷூம் சிம்புவும் போட்டியாளர்களாக இருந்தாலும், இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். இருவருடைய ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் மோதி கொண்டாலும் இருவரும் ஒருவரை ஒருவர் விட்டு கொடுத்து பேசியதில்லை

இந்த நிலையில் இன்று தனுஷ் நடித்த ‘வடசென்னை’ திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் முதல் ஆளாக இந்த படம் வெற்றி அடைய சிம்பு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சிம்பு தனது வாழ்த்து செய்தியில் கூறியதாவது:நீங்கள் நடித்த வடசென்னை’ திரைப்படம் வெற்றி அடைய எனது குடும்பத்தினர், ரசிகர்களுடன் இணைந்து நானும் வாழ்த்துகிறேன். ‘நம் இருவருக்கும் இடையே தொழிலில் போட்டி இருந்தாலும் நிஜத்திலும், வாழ்க்கையிலும் போட்டி இல்லை. எனது ரசிகர்கள் ‘வடசென்னை’ திரைப்படத்தை வெற்றிப்படமாக மாற்றுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply