shadow

தனுஷின் அடுத்த படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன்

தனுஷ் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும் வெவ்வேறு இசையமைப்பாளர்கள் இசையமைத்து வருகின்றனர். அவர் தற்போது நடித்து வரும் ‘அசுரன்’ படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வரும் நிலையில் அவருடைய அடுத்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

‘அசுரன் படத்தை அடுத்து தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தை கார்த்திக் சுப்புரஜ் இயக்கவுள்ளார். இந்த நிலையில் இந்த படத்திற்கு இசையமைக்க சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தமாகியுள்ளதாகவும், அவர் இந்த படத்திற்கான பாடல் கம்போஸிங்கை ஆரம்பித்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

தனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் இணையும் இந்த புதிய படம் வித்தியாசமான த்ரில் கதையம்சம் கொண்ட படம் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

Leave a Reply