shadow

தத்தெடுத்த குழந்தையை குப்பை பையில் தூக்கிச் சென்ற இந்தியர் கைது

கேரளாவை சேர்ந்த ரிச்சர்ட்சன் என்பவர் அமெரிக்காவின் டெக்சாஸில் வாழ்ந்து வருகிறார். இவர் சமீபத்தில் 3வயது பெண் குழந்தையை தத்தெடுத்தார். இவருக்கு ஏற்கனவே ஒரு மகள் இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தத்தெடுக்கப்பட்ட 3வயது ஷெரின் சமீபத்தில் பால்குடிக்கும்போது எதிர்பாராமல் தொண்டையில் அடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரிச்சர்ட்சன், இறந்த குழந்தையை குப்பை பையில் போட்டு குப்பையை குப்பைத்தொட்டியிலும் இறந்த குழந்தையை கால்வாயிலும் போட்டுவிட்டு வீடு திரும்பிவிட்டார்.

இந்த நிலையில் ஷெரீன் காணாமல் போனதாக செய்யப்பட்ட புகாரை விசாரணை செய்த போலிசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. இதுகுறித்து ரிச்சர்ட்சனிடம் விசாரணை செய்தபோது, ‘ஷெரினுக்கு இரவு பால் குடிக்கும் போது திடீரென அடைப்பு ஏற்பட்டது. அதனால் அவள் இறந்து விட்டாள். ஷெரின் உடலை நான் தான் வெளியே கொண்டு சென்று மறைத்து வைத்தேன்’ என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், ஷெரின் கொலை வழக்கில் புதிய உண்மைகள் வெளிவந்தன. அவளது வளர்ப்பு தந்தை ஷெரின் உடலை குப்பை பையில் போட்டு எடுத்து சென்றுள்ளார். வீட்டிலிருந்து கிளம்பும் போது தனது போனில் உள்ள ட்ரக்கரை அணைத்து வைத்துள்ளார். பின்னர் தனது காரில் குப்பைகளை கொண்டு சென்றார். குப்பைகளை ஓரிடத்தில் போட்டு விட்டு ஷெரினின் உடலை மட்டும் எடுத்து சென்று கால்வாயில் வீசியுள்ளார். வீட்டிற்கு வந்த பிறகு ட்ரக்கரை ஆன் செய்துள்ள உண்மை அனைவருக்கும் தெரிய வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மேத்யூ மற்றும் சினியிடம் அவர்கள் பெற்ற குழந்தை வளரக் கூடாது. அவர்களுக்கு குழந்தையை வளர்க்கும் தகுதி இல்லை என உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply