shadow

தடம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி !

என்னை அறிந்தால் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாகவும் , வில்லனாகவும் நடித்து வருகிறார் அருண்விஜய் . மேலும் சென்ற வருடம் அருண்விஜய் நடித்த செக்க சிவந்த வானம் நல்ல வெற்றியை பெற்றது. இந்த நிலையில் அவர் நடித்து வரும் தடம் படத்தை பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

அருண்ராஜ் இசையமைத்த தடம் படத்தின் பாடல்கள் நாளை ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி வரும் பிப்ரவரி 22 என்று சில நாள்களுக்கு முன்பு அருண்விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி இந்த படம் மார்ச் மாதம் ரிலீஸ் ஆக உள்ளதாக தெரிகிறது.

மகிழ்திருமேனி இயக்கியுள்ள இந்த படத்தில் அருண்விஜய் , தான்யஹோப் , வித்யாபிரதீப் , சோனியா அகர்வால் , யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவாளராக கோபிநாத்தும் படத்தொகுப்பாளராக ஸ்ரீகாந்தும் உள்ளனர்.

 

Leave a Reply