shadow

டெங்குவால் இதுவரை உயிரிழப்பில்லை: முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் மருத்துவர்கள்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் தினந்தோறும் உயிரிழப்பு ஏற்பட்டு வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் நிலையில் டெங்கு பரவுவது குறித்து ஆய்வு செய்வதற்காக 5 பேர் கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனை மத்திய வல்லுனர் குழு தமிழகம் வந்துள்ளது.

இந்த குழு முதலில் செங்கல்பட்டு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களிடம் இதுவரை எத்தனை பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளனர் என்று கேட்டபோது அந்த மருத்துவமனையின் மருத்துவர் ‘இதுவரை ஒருவர் கூட டெங்குவால் இறக்கவில்லை என்று கூறியுள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த எய்ம்ஸ் மருத்துவர், “எல்லா இடத்திலும் டெங்கு அதிகமாக இருக்கிறது. இங்கு மட்டும் ஏன் டெங்கு குறைவாக இருக்கிறது?” என்றார். “ரூரல் ஏரியா என்பதால் இங்கு டெங்கு அதிகம் இல்லை” என்றார் அந்த மருத்துவர் “செங்கல்பட்டு ரூரல் பகுதியா?” என சத்தமாக சிரித்தார். பிறகு டெங்கு காய்ச்சல் காரணமாக வருபவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் தடுப்பு முறைகள் பற்றி மருத்துவர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்.

செங்கல்பட்டு மருத்துவரின் பதில் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் இருப்பதாக அந்த மருத்துவமனையின் பிற ஊழியர்களே கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply