shadow

டிரைவர்களின் உற்ற நண்பனாக செயல்படும் உபர் ஆஃப்

1வாடகை கார் சேவை செய்யும் நிறுவனங்கள் இடையே ஏற்பட்ட போட்டியின் காரணமாக ஒவ்வொரு கேப் சர்வீஸ் நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல புதிய சலுகைகளை செய்து கொண்டிருக்கும் நிலையில் முன்னணி நகரங்கள் அனைத்திலும் சிறந்த சேவை செய்து வரும் உபர் (Uber) நிறுவனம், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை செய்து வருவதுடன் சரியான நேரம் மற்றும் குறைந்த கட்டணம் ஆகியவற்றை வழங்க் இவருகிறது.

உபர் நிறுவனம் தனது மொபைல் ஆப்-இல் வாடிக்கையாளர்களுக்கு தேவையான அனைத்து விபரங்களையும் எளிமையாக புரிந்து கொள்ளும்படி விளக்கியுள்ளதால் டிரைவர்களூம், வாடிக்கையாளர்களும் கருத்துவேறுபாடு கொள்ளும் வாய்ப்புகள் மிக குறைவு.

இந்நிலையில் இந்த உபர் மொபைல் ஆப், டிரைவர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் எப்படி நண்பனாக செயல்படுகிறது என்பதை பார்ப்போம்

ஓட்டுனர்களின் இலக்கு:

சில சமயங்களில் வாடிக்கையாளர்கள் தங்கள் டிரிப்பை மொபைல் ஆப் மூலம் உறுதி செய்த போதிலும் அந்த டிரிப்புக்கு செல்ல வேண்டிய டிரைவர் திடீரென மறுப்பதும் அல்லது போனை சுவிட்ச் ஆப் செய்துவிடுவதும் நடைபெறுவதுண்டு. இந்த நடைமுறை வாடிக்கையாளர்களுக்கு எரிச்சலை தருவதுடன் நிறுவனத்திற்கும் கெட்ட பெயரை உண்டாக்கி விடும்.

இந்த பிரச்சனையை தவிர்க்க உபர் நிறுவனம் டிரைவர்களே தங்கள் டிரிப்பை தேர்வு செய்யும் முறையை வைத்துள்ளது. டிரைவருக்கு விருப்பப்பட்டால் மட்டுமே ஒரு டிரிப்பை ஏற்றுக்கொள்ளலாம். அவர் மீது எந்த டிரிப்பும் திணிக்கப்படுவதில்லை.

உபர் நிறுவனம் டிரைவர்களுக்கு டிரிப்புகளின் விபரத்தை மட்டுமே அனுப்பும். அதில் எந்த டிரிப்பை செலக்ட் செய்வது என்பது டிரைவர்களின் முடிவு என்பதால் இந்த பிரச்சனை எழ வாய்ப்பில்லாமல் போகிறது.

தொடர்ச்சியான வாய்ப்புகள்:

டிரைவர் ஒரு டிரிப்பை முடிக்கும் முன்னரோ அல்லது முடித்த ஒருசில நிமிடங்களிலோ அவருக்கு அடுத்த டிரிப் குறித்த விபரங்கள் அவரது மொபைலுக்கு அனுப்பப்படும். எனவே டிரைவர்கள் டிரிப் இல்லாமல் இருக்கும் நிலை ஏற்படாது. இவ்வாறு தினந்தோறும் அடுத்தடுத்து வரும் டிரிப் வாய்ப்புகளில் அவருக்கு தேவையான டிரிப்புகளை தேர்வு செய்து மகிழ்ச்சியுடன் பணிபுரியலாம்.

சோர்வு ஏற்பட வாய்ப்பு இல்லை

ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் தங்கள் டிரைவர் எந்நேரமும் தங்கள் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் அவரை 24 மணி நேரமும் ஜிபிஎஸ்-இல் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும் நினைப்பார். ஆனால் உபரில் அப்படி இல்லை.

நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டாலோ அல்லது ஓய்வு, லன்ச்ஜ், பெட்ரோல் போடுதல் அல்லது சிறு ஓய்வு போன்ற நேரங்களில் மொபைல் ஆப்ஸ்-இல் உள்ள பாஸ் (pause) பட்டனை அழுத்திவிட்டு அவர் நிம்மதியாக ஓய்வு எடுக்கலாம். மீண்டும் அவர் தன்னுடைய பணியை ஆரம்பிக்கும் வரை அவரை நிறுவனத்தின் நிர்வாகம் தொடர்பு கொண்டு தொல்லை படுத்தாது. இந்த வசதி டிரைவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாக கருதப்படுகிறது

ஹீட் மேப்ஸ் எதுக்கு உதவுது தெரியுமா?\

உபர் நிறுவனத்தின் மொபைல் ஆப்ஸ்-இல் ஹீட் மேப்ஸ் வசதி உண்டு. இந்த மேப் டிரைவருக்கு சிறந்த வழிகாட்டியாக உதவுகிறது. டிரைவர் ஒரு டிரிப்பில் இருக்கும்போதே அவருடைய அடுத்த டிரிப் என்ன?, இந்த டிரிப் முடியும் இடத்தில் இருந்து அடுத்த டிரிப்புக்குரிய நபரை பிக்கப் செய்ய எந்த வழியாக போக வேண்டும் என்பதை ஆப் தெளிவாக சொல்லிவிடும் என்பதால் நேரம், எரிபொருள், வாடிக்கையாளர் சேவை ஆகியவை பாதுகாக்கப்படுகிறது.

தினசரி ரிப்போர்ட்டுக்கள்:

வாடிக்கையாளர்களை ஏற்றி கொண்டு டிரிப் செல்லும்போது எந்த வேகத்தில் செல்ல வேண்டும், வாடிக்கையாளர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய அணுகுமுறை ஆகிய தினசரி குறிப்புகள் அவ்வப்போது ஆப்-இல் வந்து கொண்டே இருக்கும்.

மேலும் போனை கையில் வைப்பதற்கு பதிலாக காரின் டேஷ்போர்டில் செல்போனுக்கு என ஒரு தனி இடம் இருக்கும். அதில் வைத்து கொள்வது டிரைவருக்கு பாதுகாப்பு மட்டுமின்றி கையாள்வதும் எளிது. மேலும் இந்த டேஷ்போர்டில் செல்போனை வைத்தால் அந்த காரின் வேகம் உள்பட சில முக்கிய தகவல்கள் டிரைவருக்கும் நிறுவனத்திற்கும் தரும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரேக் குறித்த பல குறிப்புகளும் இதில் தரப்பட்டுள்ளது.

அதுமட்டுஇமின்றி ஆட்டோ பைலட் என்ற ஆப்சனில் டிரைவரின் அடுத்த டிரிப் குறித்த விவரங்களும் தானாகவே அப்டேட் செய்யப்படுகிறது.

மேற்கண்ட காரணங்களால் உபர் ஆப், டிரைவர்களின் நண்பனாக செயல்பட்டு வருகிறது

Leave a Reply