டியூஷன் டீச்சருடன் கனெக்சன் ஆன மாணவியின் தந்தை: அதிர்ச்சியில் குடும்பத்தினர்

மகாராஷ்டிரா மாநிலத்தில் தனது மகளை தினந்தோறும் டியூசனுக்கு அழைத்துச் சென்ற நடுத்தர வயது நபர் ஒருவர் டியூசன் டீச்சருடன் கள்ளக்காதல் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மகாராஷ்டிர மாநிலத்தில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனது 8 வயது மகளை தினமும் கணக்கு சொல்லிக் கொடுக்கும் டியூசன் டீச்சர் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அதேபோல் டிவிஷன் முடிந்தவுடன் திரும்பவும் தனது மகளை வீட்டிற்கு கொண்டு அழைத்து வந்துள்ளார்

இந்த நிலையில் திடீரென டியூசன் டீச்சருக்கும் மாணவியின் தந்தைக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து இருவரும் தலைமறைவாகி விட்டதாகவும் கூறப்படுகிறது இதனால் டியூஷன் டீச்சரின் கணவரும் அவருடன் சென்றவரின் மனைவியும் அதிர்ச்சியில் உள்ளனர்

இது குறித்து இரு தரப்பு குடும்பங்களும் கூடிப் பேசி இருவரையும் தேடி வருகின்றனர். மகளுக்கு கணக்கு சொல்லிக் கொடுப்பதற்காக டியூசனுக்கு அழைத்துச் சென்ற தந்தை டீச்சரையே கணக்கு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply