டிஜிட்டல் மற்றும் 2.1 சவுண்ட் சிஸ்டத்தில் வெளியாகும் ரஜினி படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பூர்ணிமா ஜெயராமன், சில்க்ஸ்மிதா, ஜெய்சங்கர் உள்பட பலர் நடிப்பில் சத்யா மூவீஸ் தயாரிப்பில் இசைஞானி இளையராஜா இசையில் ஏ.ஜெகந்நாதன் இயக்கத்தில் கடந்த 1983ஆம் ஆண்டு வெளிவந்த ‘தங்கமகன்’ திரைப்படம் தற்போது டிஜிட்டலில் ரிலீஸ் ஆக தயாராக உள்ளது.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் 5.1 சவுண்ட் சிஸ்டத்தில் தயாராகியுள்ள இந்த படத்தை விரைவில் திரையிட திட்டமிட்டுள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யாமூவிஸ் தஅனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளிவந்துள்ளது. இந்த டிரைலர் வெளியானதை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதியை ரஜினி ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Leave a Reply