டிஜிட்டலில் மக்கள் தொகை கணக்கெடுப்பு: ஒரே நாடு ஒரே ஆவணம் என அமித்ஷா அறிவிப்பு

2021ஆம் ஆண்டிற்குள் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு மொபைல் செயலிகள் பயன்படுத்தப்படும் என்றும், காகித மக்கள் தொகை கணக்கெடுப்பில் இருந்து டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான மாற்றமாக இது இருக்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

அனைத்து விதமான பயன்பாடுகள் மற்றும் சேவைகளுக்கு ஒரே விதமான அடையாள அட்டை அல்லது அடையாள ஆவணம் தேவை என்று கூறிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 2021ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த தகவல்கள் மற்றும் அறிக்கை 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பை விட மிகக் குறைந்த காலகட்டத்தில் வெளியிடப்படும் என்றார்

மேலும் பாஸ்போர்ட், வங்கி கணக்கு, டிரைவிங் லைசென்ஸ், ஆதார் அட்டை உள்ளிட்ட அனைத்து விதமான ஆவணங்களையும் ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கும் திறன் கொண்டதாக டிஜிட்டல் கணக்கெடுப்பு இருக்கும் என்றும் அமித்ஷா தெரிவித்தார்.

அமித்ஷாவின் ஒரே ஆவணம் பேச்சுக்கு வழக்கம்போல் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply