shadow

டிசம்பர் 16ல் சென்னை வருகிறார் சோனியா காந்தி! ஏன் தெரியுமா?

முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரும் டிசம்பர் 16ஆம் தேதி சென்னை வரவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அவரை சிறப்பான முறையில் வரவேற்க தமிழக காங்கிரஸார் திட்டமிட்டு வருகின்றனர்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா வரும் டிசமப்ர் 16ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலய வளாகத்தில் நடைபெறவுள்ளதாகவும் இந்த விழாவில் பங்கேற்க சோனியா காந்தி சென்னை வரவுள்ளதாகவும் திமுக தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

சோனியா காந்தியுடன் மேலும் சில காங்கிரஸ் தலைவர்களும், அகில இந்திய அரசியல் கட்சி தலைவர்களும் இந்த சிலை திறப்பு விழாவிற்கு வருகை தர வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply