செப்டம்பர் 15 வரை கெடு

சீனாவின் செயலியான டிக் டாக் சமீபத்தில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட நிலையில் விரைவில் அமெரிக்காவிலும் தடை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் டிக் டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் தற்போது இதற்கான கெடு நாள் ஒன்றை அமெரிக்கா அறிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு வரும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் டிக்டாக்கை விற்கவில்லை என்றால் அமெரிக்காவில் டிக்டாக் செயலி தடை செய்யப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மைக்ரோசாப்ட் அல்லது ஏதேனும் ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு டிக்டாக்கை வரும் 15ஆம் தேதிக்குள் விற்க வேண்டும் என்றும் இல்லையெனில் டிக் டாக் அமெரிக்காவில் தடை செய்யப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply