shadow

ஜோர்டான் நாட்டில் வரலாறு காணாத கனமழை-வெள்ளம்

ஜோர்டான் நாட்டில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை பெய்து வருவதால் அந்நாடே வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் இதுவரை இந்த வெள்ளத்தில் சிக்கி 11 பேர் இறந்துள்ளதாகவும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

கல் நகரம் என்று என்ற பெயர் பெற்ற ஜோர்டானின் பழமையான நகரான பெட்ரா என்ற நகரத்தில் வெள்ளத்தின் பாதிப்பு கடுமையாக உள்ளது. அதேபோல் ஜோர்டான் தலைநகர் அம்மான் என்ற நகருக்கு தெற்கில் உள்ள மடபா என்ற பகுதியும் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

மேலும் இந்நாட்டின் இன்னொரு முக்கிய நகரமான பெட்ரா என்ற நகரில் கிட்டத்தட்ட 10 அடி உயரத்திற்கு மேல் வெள்ளம் ஓடுவதால் வெள்ள நீரில் பலர் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாகவும் அதிர்ச்சி தரும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றது.

Leave a Reply