shadow

ஜெயலலிதா வீடியோ ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தாக்கம் ஏற்படுத்துமா? ஸ்டாலின் பதில்

ஜெயலலிதா மரணத்தை அரசியலாக்குவது மிகவும் கீழ்த்தரமான செயல் என்றும் ஜெயலலிதா சிகிச்சை வீடியோ ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த வீடியோ உண்மையோ, பொய்யோ அதில் தான் தலையிட விரும்பவில்லை என்றும் இது விதிமீறலா என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்யட்டும் என்றும் அவர் மேலும் கூறினார்

இந்த வீடியோவை முன்பே வெளியிட்டிருந்தால் எந்த பிரச்னை வந்திருக்காது என்று கூறிய ஸ்டாலின், ஜெயலலிதாவின் மரணத்தையே அரசியலுக்கு பயன்படுத்தும் அளவுக்கு கீழ்தரமாக இருப்பார்கள் என நினைக்கவில்லை என்றும் அவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Leave a Reply