ஜெயம் ரவி இடத்தை பிடித்தாரா உதயநிதி?

கோலிவுட் திரையுலகின் இளம் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி, ஸ்க்ரீன் சீன் நிறுவனத்தின் தயாரிப்பில் மூன்று படங்கள் நடிக்கவுள்ளதாகவும், அதில் ஒரு படத்தை ‘தடம்’ இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாகவும் செய்திகள் வந்ததை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் மகிழ்திருமேனியின் இந்த படத்தில் தற்போது உதயநிதி நடிக்கவுள்ளதாக லேட்டஸ்ட் செய்தி கூறுகின்றது. இந்த படம் மகிழ்திருமேனின் பாணியில் அமையும் த்ரில் படம் என்றும், உதயநிதியின் முதல் ஆக்சன் படம் என்றும் கூறப்படுகிறது

உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு பின் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply