ஜெயம் ரவியின் ‘கோமாளி’ ஃபர்ஸ்ட்லுக் தேதி அறிவிப்பு

ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் கோமாளி என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நாளை வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட்லுக்கை ஜெயம் ரவி மற்றும் காஜல் அகர்வால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யூக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிகுமார், யோகிபாபு, கவிதா, சம்பத்ராஜ், நிதின்சத்யா, ரவிபிரகாஷ், பசுபதி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை பிரதீப் ரெங்கநாதன் இயக்கியுள்ளார். ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையில் ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவில் பிரவீண் கே.எல் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது

Leave a Reply