ஜெயம் ரவிக்கு ஜோடியாகும் பிரபல கவர்ச்சி நடிகை

ஜெயம் ரவியின் 25வது படத்தை இயக்குனர் லட்சுமணன் இயக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியை அடுத்து இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் மற்றும் டோலிவுட் நடிகை நிதிஹி அகர்வால் நடிக்கவுள்ளார். இவர் நடித்த தெலுங்கு படங்கள் அனைத்துமே கவர்ச்சியின் உச்சமாக இருக்கும் என்பதால் இந்த படத்திலும் அவர் தாராளமாக கவர்ச்சியை அள்ளி தெளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

டி.இமான் இசையில் உருவாகும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் பிரபல ஹீரோ ஒருவர் வில்லனாக நடிக்கவுள்ளார்

Leave a Reply