shadow

தமிழகத்திற்கு ஜூன் 15ஆம் தேதி முதல் கூடுதலாக தடுப்பூசிகள் அனுப்பப்படும் என மத்திய அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது

தமிழகத்திற்கு ஜூன் 15 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை கூடுதலாக 18.36 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படும் என மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

மேலும் தமிழகத்திற்கு இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் தமிழகத்தில் தற்போது 7.24 இலட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது