ஜீவி இயக்குனரின் அடுத்த படத்தில் விஷ்ணுவிஷால்
அறிமுக இயக்குனர் கோபிநாத் இயக்கத்தில் வெற்றி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘ஜீவி’ திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனரீதியாகவும் வெற்றி பெற்றதை அடுத்து கோபிநாத்துக்கு உடனே அடுத்த பட வாய்ப்பு கிடைத்துள்ளது
கோபிநாத் இயக்கும் அடுத்த படத்தில் நடித்து தயாரிக்கவுள்ளார் நடிகர் விஷ்ணுவிஷால். இதுவும் ஒரு அதிரடி ஆக்சன் படம் என்றும், இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
கோபிநாத்-விஷ்ணுவிஷால் இணையும் இந்த படத்திற்கும் ‘ஜீவி’ படத்திற்கு கதை திரைக்கதை எழுதிய பாபுதமிழ் கதை திரைக்கதை எழுதவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.