shadow

ஜி.வி.பிரகாஷின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் ஏற்கனவே அரைடஜனுக்கும் மேலான படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தை இயக்குனர் சசி இயக்கவுள்ளார். இவர் சமீபத்தில் ‘பிச்சைக்காரன்’ என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷூடன் இன்னொரு நாயகனாக சித்தார்த் நடிக்கவுள்ளார். இருவரும் இணைந்து நடிப்பது இதுவே முதல்முறை. மேலும் இந்த படத்தில் நடிக்க இரண்டு நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் மிக விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்திற்கு ‘ரெட்டைகொம்பன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது

Leave a Reply