ஜிப்ரானுக்கு வாக்குறுதி அளித்த அஜித்!

தமிழ் சினிமா இசையமைப்பாளர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான ஜிப்ரான், இன்று தல அஜித்தை சந்தித்து பேசியுள்ளார்.

இந்த உரையாடலின்போது ‘நாம் சேர்ந்து ஒர்க் பண்ணுவோம்’ என்று ஜிப்ரானிடம் அஜித் வாக்குறுதி அளித்தாராம்

இந்த தகவலை தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ள ஜிப்ரான், அந்த நாளுக்காக காத்திருப்பதாகவும், இன்றைய ஞாயிறு தனது வாழ்நாளில் மறக்க முடியாத ஞாயிறு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அஜித்தின் அடுத்த படத்தையும் எச்.வினோத் இயக்கவுள்ள நிலையில் அந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply