shadow

ஜிஎஸ்டி விளம்பர தூதர் அமிதாப்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்துவதற்கு இன்னும் 11 நாள்களே உள்ள நிலையில் இதை பிரபலப்படுத்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனை விளம்பர தூதராக மத்திய உற்பத்தி மற்றும் சுங்க வரி வாரியம் நியமித்துள்ளது.

74 வயதாகும் அமிதாப் பச்சன் ஜிஎஸ்டி – குறித்த 40 விநாடி வீடியோ காட்சியில் நடித்துள்ளார். இது இப்போது அனைத்து மாநிலங்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளது.

ஒரு தேசம் ஒரே சந்தை என்ற நோக்கத்தை உணர்த்தும் வகையில் ஜிஎஸ்டி அமல்படுத் தப்படுவதாக நிதி அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

ஜிஎஸ்டி தொடர்பான வீடியோ வில் இந்த வரி விதிப்பு முறை குறித்து விளக்குகிறார் அமிதாப். மூன்று வண்ணங்களைக் கொண்ட தேசிய கொடியில் உள்ளதைப் போன்ற ஒருங்கிணைந்த தன்மை கொண்டது ஜிஎஸ்டி என்று விளக்குகிறார். அதாவது ஒரே தேசம், ஒரே வரி விதிப்பு, ஒரே சந்தை என்று அவர் கூறுகிறார்.

இதற்கு முன்பு ஜிஎஸ்டி-யின் விளம்பர தூதராக பிரபல பாட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து இருந்தார்.

மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு வரி நிர்வாகத்தில் மேற்கொள்ளப்படும் மிகப் பெரிய சீர்திருத்தம் இது வாகும். இதை அமல்படுத்து வதால் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2 சதவீதம் அதிகரிக்கும் என அரசு நம்புகிறது.

நான்கு முனை வரி விதிப்புகள் இல்லாமல் மிகக் குறைந்த வரி விதிப்பாக 5 சதவீதமும், உயர் அளவாக 28 சதவீதமும் இதில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தவிர 12 சதவீதம் மற்றும் 18 சதவீத வரிவிதிப்புக்கு சில பொருள்கள், சேவைகள் இடம்பெறுகின்றன. ஜிஎஸ்டி கவுன்சிலில் மத்திய அரசும் மாநில அரசுகளும் ஒருசேர உள்ளன. இதுவரை 17 முறை இந்தக் கவுன்சில் கூடி வரி வரம்பை இறுதி செய்துள்ளன.

Leave a Reply