ஜார்கண்ட் மாநிலத்தில் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தப்படுமா? ஹேமந்த் சோரன் பேட்டி

ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபுசோரன் வரும் 29ஆம் தேதி ஜார்கண்ட் மாநில முதல்வராக பதவி ஏற்க உள்ளார். அவர் நேற்று இரவு ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரிய நிலையில் அவரை ஆட்சி அமைக்குமாறு ஆளுனர் அழைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க இருக்கும் ஹேமந்த் சோரன், குடியுரிமைச் சட்டம் ஜார்கண்ட் மாநிலத்தில் அமல் செய்யப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த போது ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து ஒருவரைக்கூட அகதியாக அல்லது நாட்டை விட்டு வெளியேற்ற அனுமதிக்கப்போவதில்லை என்றும் இந்த சட்டத்தை ஜார்கண்ட் மாநிலத்தில் அமல்படுத்த முடியாது என்றும் கூறியுள்ளார்

ஏற்கனவே மேற்கு வங்கம், கேரளம், புதுவை, ஆந்திரபிரதேசம் ஆகிய மாநில முதல்வர்கள் இந்த சட்டத்தை அமல்படுத்த முடியாது என்று கூறியிருக்கும் நிலையில் தற்போது ஜார்கண்ட் மாநிலத்தின் முதல்வராக பதவி ஏற்க இருக்கும் ஹேமந்த் சோரன் அவர்களும் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply