ஜம்மு காஷ்மீரில் பயங்கர நிலச்சரிவு: 30க்கும் மேற்பட்ட கடைகள் புதைந்ததால் பரபரப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு ஒன்றில் 30க்கும் மேற்பட்ட கடைகள் புதைந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், தோடா மாவட்டத்தில் உள்ள பாத்ரி என்றா பகுதியில் இன்று அதிகாலை 4.15 மணி அளவில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு அந்த பகுதி மக்களை பதட்டமடைய செய்தது

நிலச்சரிவின் சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்து எழுந்து அப்பகுதி மக்கள், வெளியே சென்று பார்த்தபோது 14 கட்டடங்கள் உட்பட 30 கடைகள் நிலச்சரிவில் புதைந்துள்ளது தெரிய வந்தது.

இதனையடுத்து பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்துக்குச் விரைந்து சென்ற மீட்புப்படையினர் மற்றும் காவல்துறையினர், மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்

 

Leave a Reply