shadow

சைபீரிய நாட்டில் 11,000 வருடங்களுக்கு முந்தைய மர சிலைகள் கண்டுபிடிப்பு.

shadow

உலகின் மிகப்பழமையானது என கருதப்படுவது எகிப்து நாட்டின் பிரமிடுகள். இந்த பிரமிடுகள் சுமார் 4500 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டவை என்பதால் இதன் பழமை குறித்து அனைவரும் வியந்து போற்றிக்கொண்டிருக்கும் நிலையில் சைபீரியா நாட்டில் கண்டெடுக்கப்பட்ட மரத்தினால் ஆன சிலைகளின் வயது சுமார் 11,000 வருடங்கள் என தற்போது தெரியவந்துள்ளது.

சைபீரிய நாட்டில் உள்ள Kirovgrad என்ற பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சில மரத்தினால் ஆன சிலைகளை தொல்லியல் அறிஞர்கள் ஆய்வு செய்தபோது, அந்த சிலைகள் 11,000ஆண்டுகள் பழமையானது என்றும், அந்த சிலையில் சில செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அது எந்த மொழி என்பது குறித்து ஆராய்ச்சி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

எகிப்து பிரமிடுகளை விட கிட்டத்தட்ட 7000 ஆண்டுகள் பழமையான இந்த மர சிலைகளை ஆய்வு செய்ய சைபீரியாவில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு, இந்த சிலையில் மறைந்துள்ள மர்மங்களை கண்டுபிடிக்க தொடர்ந்து ஆய்வில் ஈடுபடும் என தெரிகிறது.

Leave a Reply