செருப்பால் அடிக்கவில்லை, ஒத்தடம் மட்டுமே கொடுத்தார்கள்: முரசொலி விளக்கம்

1971ஆம் ஆண்டு சேலத்தில் நடத்திய மூட நம்பிக்கைக்கு எதிரான பேரணியில் பெரியாரை நோக்கி வீசப்பட்ட செருப்பை எடுத்து ஊர்வலத்தில் சென்ற ராமர் சிலைக்கு ஒத்தடம் கொடுத்தார்கள் என்றும், இது செருப்பை வீசிய ஜனசங்கத்தினர் தன் தலையில் தானே வாரிப்போட்டுக்கொண்ட மண் என்றும், திகவின் திட்டமிட்ட செயல் அல்ல என்றும் முரசொலி நாளிதழ் இந்த நிகழ்வு குறித்து இன்று விளக்கம் அளித்துள்ளது

மேலும் பெரியார் ஒரு கையில் ராமர் படத்தை வைத்துக்கொண்டு மறு கையால் செருப்பால் அடிப்பதுபோல் நிற்பதுபோலவும், அதனை கலைஞர் அடியுங்கள் என்று சொல்வதுபோலவும் கேலி சித்திரம் வெளியிட்டு சுவரொட்டியாகவும் துக்ளக் இதழ் ஒட்டியது என்றும் அது கேலிச்சித்திரம் தானே தவிர உண்மையில்லை என்றும் முரசொலி விளக்கம் அளித்துள்ளது

Leave a Reply