shadow

சென்னை மெட்ரோ ரயிலில் மேலும் ஒரு வசதி! பயணிகள் மகிழ்ச்சி

சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம், பயணிகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கி வரும் நிலையில் மேலும் ஒரு வசதியாக வைபை வசதியையும் தற்போது அளித்துள்ளது.

இதற்காக ஏர்டெல், ஜியோ போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உதவியுடன் மெட்ரோ ரயில் நிர்வாகம் இதனை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் இனிமேல் இந்த இலவச வைபை வசதியை பயன்படுத்தலாம்

சமீபத்தில் மெட்ரோ ரயில் குறித்த விழிப்புணர்வுவை மக்களிடம் ஏற்படுத்துவதற்காக இலவச பயண சலுகையை நான்கு நாட்கள் வழங்கிய மெட்ரோ நிர்வாகம் தற்போது வைபை வசதியையும் அளித்துள்ளது. மேலும் பயணிகளை கவர பல்வேறு வசதிகளை செய்து தர மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது

Leave a Reply