shadow

கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான வகுப்புகள்
இன்று தொடங்கியது.

சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவியர்களை கல்லூரி முதல்வர் ரோஜா பூ மற்றும் இனிப்புகளை கொடுத்து வரவேற்றார்.

நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஒருபுறம் நடைபெற்று வந்தாலும் மாணவர் சேர்க்கையை முடித்த கல்லூரிகள் வகுப்புகளை தொடங்கலாம் என உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

அதனை தொடர்ந்து இன்று முதல் கலை, அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலகட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகள் கற்றல் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் நேரடியாக உயர்கல்விக்கான வகுப்புகளை தொடங்காமல் முதல் ஒருவாரத்திற்கு அடிப்படை வகுப்புகளை ( Bridge Courses ) நடத்தி விட்டு அதன் பிறகு பாடங்களை நடத்த வேண்டும் எனவும் பேராசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார் எத்திராஜ் மகளிர் கல்லூரி முதல்வர் கோதை.பள்ளி முடித்து கல்லூரி செல்லும் முதல் நாள் மிகவும் உற்சாகமாக உள்ளதாகவும்,சீனியர் மாணவியர் வரவேற்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் முதலாமாண்டு மாணவியர்
தெரிவித்துள்ளனர்.

தாங்கள் முதலாமாண்டு சேர்ந்த போது கொரோனா காரணமாக Fresher’s Day கொண்டாபடாத நிலையில், இன்று வந்த முதலாமாண்டு மாணவியரை வரவேற்பது சிறப்பாக உள்ளதாக இறுதியாண்டு மாணவியர் தெரிவித்துள்ளனர்