shadow

சென்னையில் மு.க.ஸ்டாலின் – முகேஷ் அம்பானி சந்திப்பு

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றது முதல் பல்வேறு கட்சி தலைவர்களும், தொழிலதிபர்களும் அவரை சந்தித்து வரும் நிலையில் நேற்று இந்தியாவின் நம்பர் ஒன் தொழிலதிபர் முகேஷ் அம்பானி அவர்கள் மு.க.ஸ்டாலின் அவர்களை சென்னையில் சந்தித்தார்.

முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் திருமணம் வரும் மார்ச் 9ம் தேதி நடைப்பெறவிருப்பதை அடுத்து தன்னுடைய மகனின் திருமணத்திற்கு அழைப்பு விடுக்கவே ஸ்டாலினை சந்தித்திருக்கலாம் என கூறப்படுகிறது. முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி – அனந்த் பிரமல் ஆகியோரின் திருமணம் கடந்த ஆண்டு டிசம்பர் 12ம் தேதி கோலாகலமாக நடைப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்த சந்திப்பில் அரசியல் எதுவும் இல்லை என்றும் இருவட்டார தகவல்கள் கூறுகின்றன.

 

Leave a Reply