தமிழகத்தில் இயல்பை விட 40% குறைவாக பருவமழை பெய்துள்ளது என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

பருவமழையால் 4,133 இடங்கள் பாதிக்கப்படும் என்றும்,அதிக பாதிப்பிற்கு உள்ளாகும் பகுதிகளாக 297 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன எனவும் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

36 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு மற்றும் அறிவுரைகளை வழங்க அதிகாரிகள் நியமனம் எனவும் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி இப்போதைக்கு திறக்கப்படாது என்றும், ஏரி நிரம்பிய பின்னர் முறையான அறிவிப்பு வெளியிடப்பட்டு பின்னர் திறக்கப்படும் என்றும், 2015ல் நடந்தது போல வெள்ளம் இப்போது வர வாய்ப்பு இல்லை என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply