shadow

சென்னையில் சாதனை படைத்த விஸ்வாசம் !

viswasam-motionposterபொங்கலை முன்னிட்டு கடந்த 10 ஆம் தேதி சூப்பர்ஸ்டாரின் ‘பேட்ட’ மற்றும் தல அஜித்தின் ‘விஸ்வாசம்’ படங்கள் ஒரே நாளில் வெளியாகின. கடந்த மூன்று நாளாக இரு படங்களும் வசூலில் போட்டி போட்டு கொண்டு வருகின்றன.

இந்த நிலையில் விஸ்வாசம் படம் சென்னையில் முதல் நாள் வசூல் 88 லட்சத்தை எட்டியது. ஆனால் நேற்று விஸ்வாசம் படம் 1 கோடியை எட்டி சாதனை படைத்தது. இதுவரை சென்னை வசூலில் ஒரே நாளில் ஒரு கோடி வசூல் செய்த படங்களின் பட்டியலில் அஜித்தின் விஸ்வாசம் படமும் இணைந்துள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் பேட்டையை விட விஸ்வாசம் வசூலில் முன்னிலை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. உலக அளவிலும் விஸ்வாசம் படம் நல்ல வசூலை பெற்று வருகிறது

Leave a Reply