சென்னையில் இருந்து மார்ஸ் போகும் விஜய்சேதுபதி படக்குழு

விஜய்சேதுபதி தயாரிப்பில் ஏற்கனவே ‘ஆரஞ்சு மிட்டாய், மேற்கு தொடர்ச்சி மலை’ உள்பட ஒருசில படங்கள் தயாராகியுள்ள நிலையில் அவர் தயாரிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் ‘சென்னை பழனி மார்ஸ்’ என்று வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மார்ஸ் போகும் ஒரு காமெடி விஞ்ஞான கதைதான் இந்த படம்

இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மே 22ஆம் தேதி விஜய்சேதுப்தியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்சேதுபதி கதை, திரைக்கதை எழுதும் இந்த படத்தை பிஜூ என்பவர் இயக்கி வருகிறார். இயக்குவது மட்டுமின்றி ஒளிப்பதிவு மற்றும் எடிட்டர் பணியையும் பிஜூ அவர்களே செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply