சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் வரும் 8ஆம் தேதி முதல் இயக்க தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

டிசம்பர் 8ஆம் தேதி சென்னையில் இருந்து மன்னார்குடிக்கு ஒரு சிறப்பு ரயிலும், சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ஒரு சிறப்பு ரயிலும் மற்றும் சென்னையிலிருந்து பாலக்காட்டுக்கு ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

அதேபோல் கோவை-நாகர்கோவில் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் சென்னை வழியாக குருவாயூர் ராமேஸ்வரத்திற்கு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு டிசம்பர் 10ஆம் தேதி ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் இதற்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply