shadow

சூர்யாவின் ‘காப்பான்’ ரிலீஸ் எப்போது? புதிய தகவல்

சூர்யா நடித்து வரும் ‘என்.ஜி.கே. திரைப்படத்தின் டீசர் வரும் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ள நிலையில் சூர்யா நடித்து வரும் இன்னொரு படமான ‘காப்பான்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திரதினத்தன்று அல்லது அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமரை காப்பாற்றும் தேசப்பற்றுள்ள கேரக்டரில் சூர்யா நடித்திருப்பதால் இந்த படத்தை இந்த இரண்டு நாட்களில் ஒன்றில் ரிலீஸ் செய்வதே பொருத்தமாக இருக்கும் என படக்குழுவினர் கருதுகின்றனர்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யா, சாயிஷா, மோகன்லா, ஆர்யா, பொமன் இரானி, சமுத்திரக்கனி, பிரேம், உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

 

Leave a Reply