கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 என்ற நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டில் பட்டம் வென்ற ஆஜித், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வெளி வந்துள்ள தகவல் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

சூப்பர் சிங்கர் டைட்டில் வென்ற ஆஜித், தற்போது திரைப்பட பாடல் பாடி வரும் நிலையில் அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

இந்த தகவல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

அஜித் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதை பிக்பாஸ் குறித்த செய்திகளை வெளியிட்டு வரும் டிவிட்டர் பயனாளிகள் உறுதி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply