shadow

சுஷ்மா ஸ்வராஜ்தான் பிரதமர் பதவியை ஏற்றிருக்க வேண்டும். ப.சிதம்பரம்

கடந்த 2014ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் சுஷ்மா ஸ்வராஜ்தான் பிரதமர் பதவியை ஏற்றிருக்க வேண்டும். ஆனால் அவருடைய வாய்ப்பை மோடி, தட்டி பறித்துவிட்டதாக முன்னால் நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பொதுவாக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர்தான் பிரதமர் ஆவது வழக்கம். அந்த வகையில் 2009ஆம் ஆண்டு முதல் ஐந்து வருடங்கள் எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர் சுஷ்மா ஸ்வராஜ். அந்த வகையில் 2014ஆம் ஆண்டு பாஜக வெற்றி பெற்றவுடன் அவர்தான் பிரதமர் ஆகியிருக்க வேண்டும். ஆனால் அவருக்கு கிடைக்க வேண்டிய பதவியை மோடி தட்டிப்பறித்துவிட்டார்.

பிரதமர் மோடியினால்தான் மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, சுஷ்மா சுவராஜ் ஆகியோர் முக்கியத்துவம் இழந்துவிட்டனர். ஆனாலும், வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியை ஏற்ற சுஷ்மா, அந்த பதவியில் சரியாக செயல்பட்டு வருகிறார். வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பது முதல் வெளிநாட்டு சிறையில் உள்ள இந்தியர்களை மீட்பது வரை சுஷ்மா தனது பணியை சரியாக செய்து வருகிறார். இவர் போன்ற சிறந்த தலைவர் நாட்டுக்கு அவசியம், அவரின் நல்ல குணங்களையும், அன்பையும் மக்கள் விரும்புகிறார்கள் என்று ப.சிதம்பரம் புகழாரம் சூட்டியுள்ளார்.

சுஷ்மாவுக்கு கிடைக்க வேண்டிய பிரதமர் பதவியை மோடி தடுத்துவிட்டார் என்று ப.சிதம்பரம் கூறியிருப்பது பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply