சீனாவில் டீமானிடைசேசன்: கொரோனா வைரஸ் பாதிப்பால் அதிரடி முடிவு

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் சுமார் 1700க்கும் அதிகமானோர் பலியாகி இருக்க்கும் நிலையில் கொரோனா வைரஸ் மிக அதிகமாக கரன்சி நோட்டுகளில் மூலம் தான் மக்களுக்கு பரவுகிறது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கிய நோயாளி ஒருவர் தொட்ட கரன்சி இன்னொருவர் கைக்கு செல்லும் போது அதில் உள்ள வைரஸ் மற்றவர்களுக்கும் பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து சீனாவில் உள்ள மொத்த கரன்சியையும் திரும்பப் பெறப்பட்டு அதற்கு பதிலாக புதிய கரன்ஸிகள் வழங்கப்படவுள்ளது.

திரும்ப பெறப்படும் கரன்சிகள் கதிர்வீச்சு மூலம் வெப்பப்படுத்தப்பட்டு அதன் பின்னர் 14 நாட்கள் லாக்கரில் பூட்டி வைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. கொரோனா வைர|ஸின் ஆயுள்காலம் 14 நாட்கள் என்பதால் அந்த நாட்கள் முடிந்தவுடன் மீண்டும் கதிர்வீச்சு மூலம் வெப்பப்படுத்தப்பட்டு அதன் பின்னர் மக்களிடம் புழக்கத்தில் விடப்படும் என்று கூறப்படுகிறது

Leave a Reply