சிஷ்யனின் ‘அயோக்யா’வை கண்டு ரசித்த குரு

விஷால், ராஷிகண்ணா நடிப்பில் இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கிய ‘அயோக்யா’ திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் ‘இந்த படத்தை இன்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது குடும்பத்தினர்களுடன் வந்து பார்த்தார். அவர் மட்டுமின்றி அவர் இயக்கி வரும் ‘தர்பார்’ படக்குழுவினர்களும் இந்த படத்தை பார்த்தனர்

இந்த படத்தை பார்த்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது சிஷ்யன் வெங்கட்மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் இந்த படம் ஹிட்டானதிற்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டார்.

Leave a Reply