சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு!

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி பத்து தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் ஏற்கனவே ஒன்பது தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் தற்போது சிவகங்கை தொகுதிக்கும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்திக் சிதம்பரம் போட்டியிடவுள்ளார். தன்மீதான குற்றச்சாட்டுகள் ஏதும் நிரூபிக்கப்படவில்லை என்றும், சிவகங்கை தொகுதியில் திமுக ஆதரவுடன் நிச்சயம் வெற்றி பெறுவேன்’ என்றும் கார்த்திக் சிதம்பரம் கூறியுள்ளார்.

இந்த தொகுதியில் பாஜக வேட்பாளராக எச்.ராஜாவும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக கவிஞர் சினேகனும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply