shadow

சிம்பு படத்தின் நாயகியாகும் கீர்த்திசுரேஷ்

விஜய், சூர்யா, விக்ரம், விஷால், தனுஷ், சிவகார்த்திகேயன், விக்ரம் பிரபு, துல்கர் சல்மான், ஆகிய முன்னணி நடிகர்களுடன் மிக குறுகிய காலத்தில் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றவர் நடிகை கீர்த்திசுரேஷ்.

இந்த நிலையில் தற்போது சிம்புவின் அடுத்த படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள அதிரடி ஆக்சன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்பு, வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாக இருக்கும் படத்திற்கு ‘அதிரடி’ என்று தலைப்பு வைத்திருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் மொத்தம் நான்கு ஹீரோயின்கள் என்றும் கீர்த்தி நடிக்கவிருக்கும் கேரக்டர்தான் மெயின் நாயகி என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply